Wednesday, February 16, 2011

முறைகேடாக அலைவரிசை பெற்ற முதலாளிகளும் குற்றவாளிகள் தான் :மார்க்சிஸ்ட் செயலாளர் பேட்டி

ராமநாதபுரம்: ""2 ஜி அலைவரிசையை முறைகேடாக பெற்ற முதலாளிகளும் குற்றவாளிகள் தான்,'' என, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கள்ளச்சாராயம், மணல் மாபியா, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கிறது. அதை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முக்கிய கொலை குற்றவாளி நடமாடிய தகவல் கொடுத்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை.


இதை கண்டித்து பிப்., 28 ல் திருவாரூரில் மறியல் செய்ய உள்ளோம். பொதுமக்களுக்கான விற்பனை விலையில் பாதிப்பு இல்லாமல் மானியம் கொடுத்து, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். 2 ஜி அலைவரிசை முறைகேட்டில் அதன் அமைச்சர் ராஜா, கைதானது மட்டும் போதாது. கருணாநிதி குடும்பத்தாருடன் நிரா ராடியா நடத்திய பேச்சு வார்த்தை குறித்தும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். அமைச்சர், அதிகாரிகள் மட்டும் இதில் குற்றவாளிகள் அல்ல. அலைவரிசையை முறைகேடாக பெற்ற முதலாளிகளும் குற்றவாளிகள் தான்.

"இஸ்ரோ' ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில், அதன் பொறுப்பாளரான பிரதமர் மன்மோகன் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே ஒரு திட்டத்தின் சாதக, பாதகங்கள் நன்கு அறிந்திருப்பர். அவர்கள் ஓய்வு பெற்றதும், பிற நிறுவனத்தில் பணியாற்றும் போது, முறைகேடுகள் எளிதாகின்றன. இதை தடுக்க ஓய்வு பெறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுவதில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்த அ.தி.மு.க., உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.

No comments:

print