அரசியலில் ஈடுபடுவது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.
டெல்லியில் நேற்று என்.டி. டி.வி. நடத்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ரஜினி பங்கேற்றார். அவருக்கும் விருது வழங்கப்பட்டது.
விழாவில் ரஜினியிடம் சினிமாவில் நிறைய சாதித்து விட்டீர்கள். அடுத்த கட்டமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் அரசியலில் ஈடுபடுவீர்களா... என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ரஜினி கூறியதாவது:
அரசியல் பற்றி கருத்து எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை. விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான கடவுளுக்கும் திரைப்படத் துறையினருக்கும் நன்றி என்று கூறினார்.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு ரஜினியின் அரசியல் செல்வாக்கு பற்றி பேசினார். அவர் கூறியதாவது:
1996-ல் ரஜினி அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவானது. ஆனால் அவர் வரவில்லை. அப்போது அரசியலுக்கு வந்து இருந்தால் சுலபமாக ஜெயித்து இருப்பார். அந்த அளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அரசியலுக்கு வர அவர் தயங்குவதால் வரமாட்டார் என்று அர்த்தம் கிடையாது என்றார்.
No comments:
Post a Comment