Wednesday, February 16, 2011

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆகிய மூன்று சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். "கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்; ஒருநபர் கமிஷன் சிபாரிசு அடிப்படையில் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை பெற்றவர்களுக்கு கிரேடு சம்பளம் உயர்த்தி வழங்கியது போல், வி.ஏ.ஒ.,க்களுக்கும் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மூன்று சங்கத்தினரும் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் செய்வதாக அறிவித்தனர். மேட்டுப்பாளையம் வட்ட கிளை செயலாளர் ஜெயப்பிரகாசம், மாவட்ட பொருளாளர் பண்ணாரி, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க செயலாளர் சந்திரன், ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர். வட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

No comments:

print