Tuesday, February 15, 2011

ஓட்டுக்காக கணக்கெடுக்க களமிறங்கிய தி.மு.க.,

அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்ததா என்பதை அறிந்து, இல்லாதபட்சத்தில், உடனடியாக நிவர்த்தி செய்து ஓட்டுகளை பெற படிவத்துடன் கணக்கெடுக்கும் பணியில் தி.மு.க.,வினர் இறங்கியுள்ளனர்.



சட்டசபை தேர்தலையொட்டி, மக்களின் நாடித்துடிப்பை தி.மு.க., உளவுத்துறை மூலம் அறிய முயன்று வருவது ஒருபுறம் இருந்தாலும், கட்சிக்காரர்கள் மூலம் புதிய முறை கணக்கெடுப்பை நடத்த துவங்கியுள்ளனர்.அதற்காக படிவம் ஒன்றை ஒவ்வொரு பகுதியிலும் கட்சிப் பொறுப்பாளரிடம் கொடுத்துள்ளனர். அதில் வரிசை எண் உள்ளிட்ட 19 காலங்கள் உள்ளன. வரிசை எண், வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், ஜாதி, தி.மு.க.,வை சேர்ந்தவரா, மற்ற கட்சியினரா, நடுநிலையாளரா, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் / விதவை / மாற்றுத் திறனாளி உதவித் தொகை, 5 ஆண்டுகளில் அர”ப் பணி பெற்றோர், வேலையில்லா பட்டதாரி உதவித் தொகை, தொழிற்கல்வி கட்டண சலுகை, "108' அவசர ஊர்தி, இதர சலுகைகளில் பயனடைந்தவர்களா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று படிவத்துடன் கணக்கெடுப்பு பணியை செ#து வருகின்றனர். அரசின் சலுகைகள் பெற்றிருந்தால் அதைக்கூறி ஓட்டு கேட்பது, சலுகைகள் கிடைக்காவிட்டால் உடனே கிடைக்க செ#து அவர்களின் ஓட்டுகளை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர்

No comments:

print