Wednesday, February 16, 2011

அ.தி.மு.க.,வில் விருப்பமனு ஏழாயிரத்தை எட்டியது

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் 7,000 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முகூர்த்த நாள் என்பதால், கட்சியின் தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க.,வினர் கூட்டம் நேற்று அலைமோதியது.கடந்த 5ம் தேதியிலிருந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. பொள்ளாச்சிக்கு, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சூலூர் மற்றும் பல்லடத்துக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் தாமோதரன், மயிலாப்பூர், வேளச்சேரிக்கு இலக்கிய அணி மாநிலச் செயலர் வைகைச் செல்வன், பெரம்பலூருக்கு சந்திரகாசி எம்.எல்.ஏ., கும்மிடிப்பூண்டி, திருவள்ளூருக்கு பரிமேலழகர், செங்கல்பட்டுக்கு அரிகிருஷ்ணன், விருகம்பாக்கத்திற்கு சீனிவாசன், ராமநாதபுரத்திற்கு இளஞ்செழியன், திருப்பூருக்கு கலைமகள் கோபால்சாமி உட்பட பலர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.அண்ணாநகர், திருவையாறு தொகுதிக்கு அ.தி.மு.க., வக்கீல் பிரிவு தலைவர் சேதுராமன், விழுப்புரம், மதுரவாயல் தொகுதிக்கு கோபிநாதன், சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளுக்கு சோழன் பழனிச்சாமி, அரவக்குறிச்சிக்கு இஸ்மாயில், கம்பம், பல்லடம் தொகுதிகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில செயலர் ராஜேந்திரன் உட்பட பலர் நீண்ட வரிசையில் நின்று, விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.16ம் தேதியுடன் விருப்ப மனுக்கள் ஏழாயிரத்தை எட்டின. 16ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், விருப்ப மனுவை தாக்கல் செய்வதற்கு, கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் குவிந்தனர். ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையில் கட்சியினரின் வாகனங்கள் அதிகமாக காணப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


No comments:

print