மும்பை : உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்களின் கூட்டம் நேற்று அக்கட்சித் தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்தது.
அப்போது, வரும் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மகாராஷ்டிராவில், உள்ளாட்சி நிர்வாகங்களில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் பிரிதிவிராஜ் சவானிடம் வலியுறுத்த வேண்டும் என்று சரத்பவார் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், 27 ஜில்லா பரிஷத் மற்றும் 10 நகராட்சிகளில் நடக்க உள்ள, தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment