Friday, February 18, 2011

கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிரடி ரெய்டு


சென்னை: ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.

மத்திய அமைச்சராக இருந்த ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்றதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வந்ததையடுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித்உஸ்மான்பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக நடத்திய விசாரணையில் வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சி.பி.ஐ., தனது விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருந்தது.

இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் அந்நிறுவனம் ஆயிரத்து 537 கோடிக்கு வாங்கிய சில மாதங்களிலேயே 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது. இத‌ைனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கும் கலைஞர் டி.வி.,க்கும் இடையில் பண பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஸ்வான் நிறுவனத்தின் மற்றொரு கிளை அலுவலகமான ( சினியுக் ) மூலம் 200 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கலக்கம் : இது குறித்து கலைஞர் டி.வி., அளித்துள்ள விளக்கத்தில் இந்த பணம் பரிவர்த்தனை கடனாக பெறப்பட்டது.பின்னர் 31 கோடி வட்டியுடன் சட்டத்திற்குட்பட்டு வருமான வரி செலுத்தி அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்களது நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம். எங்களிடம் ஆவணஙகள் முறையாக உள்ளன என்று கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை அண்ணாஅறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சி.பி.,ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் தி.மு.க., கலக்கம் அடைந்துள்ளது.

இதுபோல காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.

No comments:

print