சென்னை:துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 5 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம், லண்டன் சென்றார். உடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நண்பர் ராஜா சங்கர் ஆகியோரும் சென்றனர். இது, துணை முதல்வரின் தனிப்பட்ட பயணம் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி துணை முதல்வர், சென்னை திரும்புகிறார் என்று, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment