Saturday, February 19, 2011

மதுரையில் தொழில் துவங்க பிரிட்டன் நிறுவனங்கள் ஆர்வம்

மதுரை:""மதுரையில் தொழில் துவங்க பிரிட்டன் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன,'' என தென்மாநிலங்களுக்கானபிரிட்டன் துணை ஐ கமிஷனர் மைக் நிதவ்ரியானகிஸ் தெரிவித்தார்.பிரிட்டன் வணிக மற்றும் முதலீட்டு நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் மதுரையில் தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சி.ஐ.ஐ., மண்டல தலைவர் அரவிந்த் சீனிவாசன் வரவேற்றார். துணைத்தலைவர் ஷியாம் பிரகாஷ் குப்தா அறிமுக உரை நிகழ்த்தினார்.துணை ஐ கமிஷனர் மைக் நிதவ்ரியானகிஸ் பேசியதாவது:பிரிட்டன் நிறுவனங்கள், தென் மாநிலங்களின் இரண்டாம் நிலை நகரங்களில் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் துவங்குவது, வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

திருவனந்தபுரம், கொச்சி, கோவை, திருச்சி, விசாகப்பட்டினத்திற்கு அடுத்து மதுரையில் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.மீனாட்சி கோயில் இருக்கும் மதுரை, கலாச்சார பெருமை கொண்டது. கல்வி, மருத்துவம், டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் போன்ற துறைகளில் மதுரை சிறப்பு பெற்று உள்ளது. இத்துறைகளில் நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளன. பிரிட்டனின் அட்கின்ஸ் நிறுவனம் தேர்வு செய்த, குறைந்த கார்பன் வெளியிடும் நகரங்களில் ஒன்றாக மதுரை உள்ளது. இந்த சிறப்பு அம்சங்களால் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தொழில் துவங்கவும், வர்த்தக ஒப்பந்தம் செய்யவும் பிரிட்டன் ஆர்வமாக உள்ளது. இதே போன்று இப்பகுதியில் உள்ள நிறுவனங்கள், பிரிட்டனில் முதலீடு செய்யவும் வழிகாட்டுகிறோம்.இவ்வாறு பேசினார்.துணை தூதரக காலநிலை மாற்றத்திற்கான ஆலோசகர் வித்யா, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் தீபிகா பேசினர். வர்த்தகப்பிரிவு தலைவர் ஜேமி கிரிப் நன்றி கூறினார்.

No comments:

print