Wednesday, February 16, 2011
தேர்தல் புறக்கணிப்பு குரூர் மக்கள் முடிவு
கள்ளக்குறிச்சி : தனி ஊராட்சி அனுமதி வழங்கத் தவறினால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக குரூர் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியம் முடியனூர் ஊராட்சிக்கு உட்பட்டது குரூர் கிராமம். இக்கிராமத்தில் 1,650 பேர் வசித்து வருகின்றனர். இதில் ஓட்டுரிமை பெற்றவர்கள் 1,000 பேர் உள்ளனர். குரூர் தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். உடனடியாக குரூர் தனி ஊராட்சிக்கு அனுமதி வழங்கத் தவறினால் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதை வலியுறுத்தி நேற்று மாலை சமூக சேவகர் அய்யாசாமி தலைமையில் குரூர் கிராமத்தில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment