சேத்தியாத்தோப்பு : தலைமை கரும்பு அலுவலரை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய சர்க்கரை ஆலை ஓட்டுனர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை ஓட்டுனர் சங்கச் செயலர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றுவதற்கான டிரிப் ஷீட்டுகளை (வாகன நடை சீட்டு) கடந்த 22 ஆண்டுகளாக கரும்பு கோட்ட அலுவலகங்களில் வழங்கி வந்தனர். இந்த ஆண்டு அரவை துவக்கத்திலிருந்து ஆலையின் நுழைவு வாயிலின் முன் வழங்க தன்னிச்சையாக முடிவு எடுத்து விவசாயிகளையும், டிராக்டர் ஓட்டுனர்களையும் அலைகழித்து வருகின்றனர். தலைமை கரும்பு அலுவலரின் இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து டிராக்டர் ஓட்டுனர் சங்கம் சார்பில் நாளை (17ம் தேதி) காலை 8 மணி முதல் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வராமல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment