Tuesday, February 15, 2011
ஜே.பி.சி., விசாரணை மட்டும் போதாது : அத்வானி
கோல்கட்டா : ஸ்பெக்ட்ரம் முறைகேடு மட்டுமல்லாது, காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் முறைகேடு, எஸ் - பேண்ட் முறைகேடு உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளுக்கும் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று பாஜ மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது, நாட்டில் ஊழல்கள் நடைபெறுவதற்கு, ஆளும் அரசே உறுதுணையாக இருப்பது வேதனையளிக்கிறது. ஜேபிசி விசாரணை விசயத்தில் தாங்கள் தங்கள் நிலையை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ள மாட்டோம், இந்த ஜேசிபி விசாரணையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு மட்டுமல்லாது, அனைத்து முறைகேடுகள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். எஸ் - பேண்ட் முறைகேட்டில், இதுவரை மத்திய அரசு வாயே திறக்கவில்லை, அரசு விரைவில் மவுனம் கலைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment