Wednesday, February 16, 2011

பிரதமர் இன்று டிவியில் பேட்டி


புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் விவகாரம் உட்பட நாட்டில் நிலவும், பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மன் மோகன் சிங் இன்று பேட்டி அளிக்கிறார். இந்த பேட்டி இன்று காலை 11 மணிக்கு தூர்தர்ஷனில், டில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பேட்டியின் போது, 2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் குடியிருப்பு, காமன்வெல்த், எஸ் - பாண்ட் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, தனது நிலையை விளக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும், 21ம் தேதி தொடங்கும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

No comments:

print