Thursday, February 3, 2011

டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஜெ.,?

சென்னை : டுவிட்டர் சமூக இணையதளத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளமான டுவிட்டரில் தனது பெயரில் கருத்துக்கள் பரப்பப்படுவது தனது கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தை தான் பயன்படுத்துவதில்லை என்றும், தனது பெயரில் இடம் பெறும் கருத்துக்கள் போலியானது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடாக தனது பெயரை பயன்படுத்துவோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

No comments:

print