Saturday, February 5, 2011
அச்சம் காரணமாக ராஜாவுக்கு ஆதரவாக தீர்மானம்: தி.மு.க., மீது வைகோ குற்றச்சாட்டு
திருச்சி : ""ஸ்பெக்ட்ரம்' ஊழலில் யார், யாருக்கு பங்கு உள்ளது என்று , சி.பி.ஐ., வசம் ராஜா சொல்லி விடுவாரோ என்ற அச்சம் காரணமாக, "ராஜா மீது தவறு இல்லை' என, தி.மு.க., பொதுக்குழுவில் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருச்சியில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: சி.பி.ஐ., கைது செய்த பிறகு, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, "ராஜா மீது எந்த தவறும் கிடையாது. எதிர்கட்சிகளுடைய சில நடவடிக்கையால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது' என்று விளக்கம் தந்து, "நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் தான் அதை பற்றி பொருட் படுத்த வேண்டும். எனவே, இதை பொருட் படுத்த தேவையில்லை' என, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.நீதிமன்றம் ராஜாவை குற்றவாளி என்று தண்டித்தால், "நீதிமன்றமும் தவறு செய்யலாம்; மக்கள் மன்றம் பெரிதுபடுத்தக் கூடாது' என்று கருணாநிதி வசனம் எழுதி வைத்திருப்பார்.
ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார் கருணாநிதி? இந்த ஊழல் பணம் எங்கெல்லாம் போனது? அது தான் விஸ்வரூபம் எடுக்கும் கேள்வி. உண்மையை ராஜா சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக தான், தி.மு.க., பொதுக்குழுவில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்வாறு வைகோ கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment