Saturday, February 5, 2011

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு


சென்னை:பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, அருணாசலப்பிரதேச துணை தலைமை தேர்தல் கமிஷனர், நேற்று ஆய்வு செய்தார்.தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலின் போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள, 4 ஆயிரத்து 191 ஓட்டுப் பதிவு பிரிவும், 4 ஆயிரத்து 650 கட்டுப்பாட்டு பிரிவும் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.அந்த இயந்திரங்களில் முன் பதிவு செய்யப்பட்டிருந்த ஓட்டுக்களை அழிப்பது, இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்று சோதித்து அவற்றை"பேக்' செய்வதற்காக பெங்களூரில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வந்துள்ளனர்.இப்பணிகள் கடந்த 31ம் தேதி முதல் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அருணாசலப்பிரதேச துணை தலைமை தேர்தல் கமிஷனர் பட்டாச்சார்ஜி மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் ஆகியோர் நேற்று பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

No comments:

print