இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி வெள்ளார் நாயக்கன் பாளையத்தில் குடிநீர், ரோடு வசதி கேட்டு, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இடைப்பாடி நகராட்சியில் 2வது வார்டுக்குட்பட்ட வெத்திலைகாரன் கொட்டாய், வெள்ளார் நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ரோடு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. துணை சேர்மன், கவுன்சிலர் ஆகியோர் தி.மு.க., கட்சியை சர்ந்தவர்களாக இருந்தும் எந்த அடிப்படை வசதி செய்யாததை கண்டித்து, தி.மு.க., பிரமுகர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த இடைப்பாடி நகராட்சி சேர்மன் இருசப்பமேத்தா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என, உறுதி கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட வெத்திலைகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்கள்.
No comments:
Post a Comment