Saturday, February 5, 2011

வெளிநாடுகளில் கறுப்பு பணம் டிபாசிட்: 17 பேருக்கு நோட்டீஸ்

கோல்கட்டா : ""வெளிநாடுகளில் கறுப்புப் பணம் வைத்துள்ள 17 பேருக்கு, அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணையையும் துவக்க உள்ளோம்; ஆனால், அவர்கள் பெயரை வெளியிட முடியாது,'' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். டிபாசிட் செய்த பணம் வெளிக்காட்டப்படாது என்பதால், வருமான வரி தொடர்பான விவகாரங்களுக்காக மட்டும், சம்பந்தப்பட்டவர்கள் குறித்த தகவல்களைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டிலை தனியார் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

No comments:

print