Saturday, February 5, 2011

சர்வதேச பெட்டக விவகாரம் : ஜெ., குற்றச்சாட்டு

சென்னை : ""கேரள மாநிலம் வல்லார் படத்தில், சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம், தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.



அவரது அறிக்கை: கேரள மாநிலம் வல்லார் படத்தில், சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம், தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார் கருணாநிதி. தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து வரும் துறைமுகம். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவை பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் சரக்குகள் தூத்துக்குடியில் இருக்கும் சிறிய கப்பல் மூலம் கொழும்பில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள தாய் கப்பலில் அனைத்து சரக்குகளும் ஏற்றப்படும்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாதந்தோறும் 16 ஆயிரம் பெட்டக ஏற்றுமதியும், 14 ஆயிரம் பெட்டக இறக்குமதியும் நடக்கிறது. டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த போது, வல்லார்படம் என்ற இடத்தில் முதன்முதலாக சர்வதேச பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசால் அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த முனையம் செயல்பாட்டிற்கு வந்து விட்டால் திருப்பூர், அவினாசி, கரூர், ஈ÷õடு, கோவை பகுதிகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, நேரடியாக வல்லார் படத்தில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு அனுப்பி விடுவர். தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தற்போதைய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். இதை நம்பியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், இதர பணியாளர்கள் பாதிக்கப்படுவர்.

No comments:

print