Saturday, February 5, 2011

வேட்டி, சேலை மட்டுமல்ல டீ, வடையும் இலவசம்

அன்னூர் :தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு உபசரிப்பு அதிகரித்துள்ளது. அன்னூரில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த பொதுமக்களுக்கு, இலவச டீ, வடை சப்ளை செய்யப்பட்டது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குகிறது. வழக்கமாக வேட்டி, சேலை வினியோகம் ஜன., 1ம் தேதி துவங்கி, பொங்கலுக்குள் (ஜன., 15) முடிந்து விடும். இந்த ஆண்டு பொங்கலுக்கு 30 சதவீத வேட்டி, சேலைகள் மட்டும் வந்தது. அதன் பின்னும், மிக தாமதமாக வந்த வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.கோவை மாவட்டம், அன்னூரில், நேற்று முன்தினம் அங்கப்ப முதலியார் காலனியில் உள்ள இரண்டாம் எண் ரேஷன் கடையில் 11வது வார்டு மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகம் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், டீ, வடை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.சட்டசபை தேர்தல் மே மாதமும், உள்ளாட்சி தேர்தல் செப்டம்பரிலும் நடைபெற உள்ளதால், அரசியல் பிரமுகர்களுக்கு வாக்காளர்கள் மீதான, "அன்பு' அதிகரித்து கொண்டே போகிறது.

No comments:

print