Wednesday, February 2, 2011

ராஜா கைது- அரசியல் ரீதியான நடவடிக்கை : ஜெ

சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

print