Tuesday, February 8, 2011

ராஜா உதவியாளர்கள் ரிமாண்ட்

புதுடில்லி : 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மாஜி அமைச்சர் ராஜாவை மேலும் 2 நாள சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியதுஅதே நேரத்தில் ராஜாவின் உதவி அதிகாரிகள் 2 பேருக்கு ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 2 நாள் விசாரணை முடித்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது ராஜா விடுவிக்கப்படுவாரா அல்லது சிறையில் அடைக்க கோர்ட் ரிமாண்ட் செய்யுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக மாஜி தொலைதொடர்பு அமைச்சர் ராஜா கடந்த 2ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். ராஜாவுடன் அப்போதைய தொலைதொடர்பு செயலர் சித்தார்த்தா பெஹூரா, தொலைதொடர்பு அதிகாரி ஆர்.கே.சண்டோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ராஜாவை ஆஜர் படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை 5 நாள் காவலில் எடுத்த விசாரித்தனர். இந்நிலையில் ராஜாவின் காவல் முடிவடைந்தது. இதனையடுத்து ராஜா, இன்று பிற்பகலில் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரிடம் மேலும் விசாரணை நடத்திட 4 நாள் அவகாசம் கேட்டனர். இதற்கு நீதிபதி 2 நாள் அனுமதி அளித்தார். மேலும் 2 நாட்கள் சி.பி.ஐ., காவலில் விசாரிக்கலாம். அதிகாரிகள் சண்டோலியா, பெஹூரியா ஆகிய இருவரும் பிப்ரவரி 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இருவரும் டில்லி திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

No comments:

print