சென்னை : முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, கவர்னர் பர்னாலாவிடம் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு கொடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் உள்ளவர்கள், வீடு இல்லாதவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டத்திற்கு தகுதியானர்கள் என்பது விதிமுறை. ஆனால், முதல்வர் கருணாநிதி தன் அதிகாரத்தை பயன்படுத்தி விதிமுறை மீறி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோருக்கு இடம் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி இக்குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர்வதற்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் அனுமதி கோரி நேற்று ராஜ்பவன் சென்றார். கவர்னரை சந்திக்க முடியாததால், அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரிய மனு அளித்தார்.
பின், பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி கூறியதாவது:தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தில், தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி நிலம் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எனக்கு ஆவணங்கள் கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது கோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி கோரி கவர்னரிடம் மனு கொடுக்க வந்தேன். ஆனால், கவர்னருக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா என் 25 ஆண்டு கால நண்பர். அவர் உடல் நலம் பெற எனது வாழ்த்துக்கள். இருப்பினும் என் கோரிக்கை மனு ராஜ்பவன் உயர் அதிகாரிகள் முலம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் யார் யாருக்கு இடம் கிடைக்க வேண்டும், கிடைக்க கூடாது என்பது குறித்தும் தற்போது யார் யாருக்கு கிடைத்துள்ளது என்பதும் தெளிவாக கூறியுள்ளேன். இது மிகப்பெரிய ஊழல். மகாராஷ்டிரா ஆதர்ஷ் குடியிருப்பு, எடியூரப்பாவை விட மிகப்பெரிய ஊழல். எனவே, முதல்வர் கருணாநிதி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.முதல்வர் கருணாநிதி 23 மிகப்பெரிய ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
"2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முதல்வரின் பெயரை சேர்க்க கவர்னர் அனுமதி தேவையில்லை. வரும் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்து அவர்களை சட்டசபைக்கு அனுப்பி வைப்பேன்.முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. அப்படி வந்தாலும் அதை சந்திக்க தயார். என் மீது பல வழக்குகள் போடப்பட்டது. ஆனால், இதுவரை யாரும் ஜெயித்ததில்லை. யார் ஊழல் செய்தாலும் நான் வெளிப்படுத்துவேன். கருணாநிதி போல ஊழல் செய்த முதலமைச்சர் வரலாற்றில் எந்த ஊரிலும் கிடையாது.இவ்வாறு சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.
"சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்ட விரோதமாக பெற்ற அனைவரும், சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என, சுப்ரமணியசாமி கோர்ட்டில் விடுத்த அறிக்கையை, நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இந்தக் கோரிக்கைக்கான காரணங்களும், ஆதாரங்களும் பின் வருமாறு:கனிமொழி இன்று பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி. தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கும் கலாசார விழாக்களை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தும் பொறுப்பை, கனிமொழி மற்றும் ஜெகத் கஸ்பரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தமிழ் மையத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. இந்த நிறுவனம், சென்னை சங்கமம் என்ற பெயரில் கலாசார விழாக்களை நடத்தி வருகிறது.
ராஜாத்திக்கு சொந்தமான ராயல் எண்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராக பணிபுரிந்து வந்த சரவணன், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச்சைக்குரிய 350 கோடி ரூபாய் மதிப்புடைய வோல்டாஸ் நிலம், மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு வெறும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட போது தரகராகச் செயல்பட்டவர் தான் இந்த சரவணன்.இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என வெளிப்படையாகத் தெரிவித்த ராஜாத்தி, இந்த நிலம் குறித்த தனது கவலையை நிரா ராடியாவுடன் டெலிபோன் உரையாடலில் தெரிவித்திருக்கிறார். சொற்ப விலைக்கு வோல்டாஸ் நிலத்தை வாங்கிய மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தான், கோத்தகிரியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டத்தை, வெறும் இரண்டரை கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்.
சி.ஐ.டி., காலனியில் அமைந்துள்ள ராஜாத்திக்கு சொந்தமான புதிய வீட்டின் "ஏசி' பெட்டிகளை பழுது பார்த்துக் கொண்டிருந்த "ஏசி' மெக்கானிக் டேனியல் சாமுவேல், தமிழகத்தின் இரண்டாவது பெண்ணுக்காக மூணாறு, கோட்டயம் மற்றும் கேரளாவில் உள்ள இதர இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறார்.பாலங்கள், புதிய நூலகக் கட்டடம், தலைமைச் செயலகக் கட்டடம் ஆகியவற்றை கட்டுவதற்கான பொறுப்பு, இந்த இ.டி.ஏ., குழுமத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
முதலில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகமாகக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பென்னாகரம் இடைத்தேர்தலின் போது 750 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம் என, தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டார். கவர்னர் உரையில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான செலவு 910 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான செலவு 1,100 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.ஸ்பெக்ட்ரம் இழப்பைப் போலவே, இந்தக் கட்டடத்தை கட்டி முடிப்பதற்குள், இதற்கான செலவு மேலும் உயரும். மேற்படி திட்டங்களின் மூலம் பயனடைந்த இதே இ.டி.ஏ., குழுமம் தான், கருணாநிதி குடும்பத்தின் நிதியை வெளிநாடுகளில் கொண்டு சேர்ப்பதில் கால்வாயாகத் திகழ்கிறது.சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய கடமையை பாரபட்சமின்றி, அச்சமின்றி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய தொகையை சட்ட விரோதமாக பெற்ற அனைவரும் சிறைக்கு பின்னால் கம்பி எண்ண வேண்டி வரும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment