Monday, February 7, 2011
தகவல் அறியும் உரிமை : அரசு ஊழியரின் 'சர்வீஸ் புக்' விவரம்
புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு ஊழியரின் சர்வீஸ் புத்தகத்தில் உள்ள பணி விவரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வேயில் தலைமை சட்ட உதவியாளராக வேலை பார்ப்பவரின் சர்வீஸ் புத்தகத்தில் உள்ள விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்டு மனு ஒன்று தரப்பட்டது. ஆனால், அந்த தகவல்களை தர ரயில்வே மறுத்தது. சர்வீஸ் புத்தகம் அந்த ஊழியரின் தனிப்பட்ட விவரங்களை கொண்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8(1) (ஜெ) பிரிவு, அதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை தரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது என்று ரயில்வே பொது தகவல் அதிகாரி தெரிவித்திருந்தார். இதனால் தகவல் கேட்டு மனு கொடுத்தவர், தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த தகவல் ஆணையர் அன்னபூர்ணா தீட்சித் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு ஊழியரின் தனிப்பட்ட தகவல்களை மட்டுமே வெளியிட கூடாது. அவரது வேலை தொடர்பான தகவல் தருவதை சட்டம் தடுக்கவில்லை. சர்வீஸ் புத்தகத்தில் உள்ள விவரங்களை தரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment