கிருஷ்ணகிரி : ""எந்த கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றாலும், 40 முதல், 45 சீட்டுக் களை கேட்டு பெறுவோம். இன்னும் நான்கு நாளில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்,'' என, பர்கூரில், பா.ம.க., நிறுவனர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பா.ம.க., கிளை தலைவர்கள், செயலர்கள், பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற ராமதாஸிடம், நிருபர்கள் கேள்விக்கு எழுப்பினர். அப்போது அவர் சற்று கோபமாக கூறிய பதில்:
* "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற சோனியா விரும்ப வில்லை' என, தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி பேசி யிருப்பது குறித்து.
கருத்து கூற விரும்பவில்லை.
* பா.ம.க., எந்த கூட்டணியில் இடம் பெறும்?
இன்னும் நான்கு நாளில் முடிவை தெரிவிப்போம்.
* ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் ராஜா கைதால், தி.மு.க., கூட்டணிக்கு தேர்தலில் வெற்றியை பாதிக்குமா?
கருத்து கூற விரும்ப வில்லை. பா.ம.க., தனித்து போட்டியில்லை. கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்கும். எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும், பா.ம.க., 40 முதல், 45 சீட்டுக்களை பெறும். இவ்வாறு ராமதாஸ் பதிலளித்தார்.
No comments:
Post a Comment