Monday, February 7, 2011

டிஜிட்டல் பேனர்களை வைக்க தடை : தமிழக அரசு

சென்னை : பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை வைக்க தடை விதிக்க வேண்டும்என கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதில், பொது இடங்களில் அங்கீகாரம் பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை வைக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், இதன் பிறகு அங்கீகாரம் இல்லாமல் பேனர்கள் வைப்பவர்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

No comments:

print