Saturday, February 5, 2011

ராஜா கைது: காங்., நிலை என்ன?

புதுடில்லி :"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதன் முடிவை பொருத்து, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் ந டவடிக்கை எடுக்கப்படும்' என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.
காங்., செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களுக்கு தற்போது நடந்து வரும் விசாரணையின் இறுதியில் பதில் கிடைக்கும். விசாரணையின் உச்சகட்டமாக ராஜா கைது நடவடிக்கை. விசாரணையின் முடிவில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.மு., கூட்டணியை பொருத்தவரையில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்ததுமே, தார்மீக பொறுப்புடன் பதவி விலகி விசாரணையை சந்தித்து வருகின்றனர்.ஆனால், பாரதிய ஜனதா ஆளும் கர்நாடகாவில் நில ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் எடியூரப்பா, பதவி விலக மறுக்கிறார்.ராஜா கைது செய்யப்பட்டதால் அவர் குற்றவாளி என கருதமுடியாது, என்று தி.மு.க., கூறியிருப்பது அவர்கள் கட்சியின் கருத்து.இவ்வாறு ஜெயந்தி நடராஜன் கூறினார்.

No comments:

print