Tuesday, February 8, 2011

கழிவறைக்கு கட்டுப்பாடுதவிப்பில் பொதுமக்கள்

சேலம்: சேலம் புதிய கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
ஐந்து மாடிகள் கொண்ட சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மூன்று மாடிகள் வரை, 35க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிவறைகள், அதிகாரிகள் பயன்பாட்டுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொருத்துறை அலுவலர்களுக்கும், தனித்தனியாக பூட்டு, சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மட்டும் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். மற்ற தாலுகாவில் இருந்து வரும் அதிகாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் அவசரத்துக்கு ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மற்ற துறை அதிகாரிகளிடம் கேட்கவும் தயங்குகின்றனர்.

கழிவறையை பூட்டி விட்டு சென்று விடுவதால், பொதுமக்களும் அலுவலக வளாகத்திலேயே தங்களுடைய சிரமத்தை போக்கிக்கொள்கின்றனர்.
திங்கள்கிழமையன்று நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பல்வேறு பிரச்னைகளுக்காக பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். இயற்கை உபாதையை கழிப்பதற்கு வழியில்லாததால், பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "கழிவறையை திறந்து வைத்திருந்தால், அங்குள்ள தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தி விடுகின்றனர். மற்றவர்கள் செல்ல முடியாத அளவுக்கு அசிங்கப்படுத்தி விடுகின்றனர். அதனாலேயே பூட்டப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர் நாளன்று பூட்டி வைப்போம். மற்ற நாட்களில் கழிவறைகள் திறந்து தான் கிடக்கும்,' என்றனர்.

No comments:

print