திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி யூனியன் எழிலூர் பஞ்சாயத்தில் சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. வீடுகளை ஒதுக்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்வதுக்கு முதல் கிராமசபா கூட்டம் எழிலூர் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட திட்ட இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. இதில், 246 பேர் சமத்துவபுரத்தில் வீடு கேட்டு மனு கொடுத்தனர். இதில், தாசில்தார் பன்னீர்செல்வம், யூனியன் ஆணையர் வைதேகி ஜெயராமன், கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment