திருச்சி: "அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டி யிட வேண்டும்' என்று திருச்சி மாவட்ட அ.தி.மு.க.,வினர் போட்டி போட்டு விண்ணப்ப மனுத்தாக்கல் செய்கின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி ஜெயலலிதா தலைமை யில் திருச்சியில் அ.தி.மு.க., நடத்திய கண்டன பொதுக் கூட்டத்தால், திருச்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டது போன்று ஊரெல்லாம் மனித தலைகளாக காட்சியளித்தது. கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, "திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தான், எனது பூர்வீகம். எனது சொந்த ஊரில் உங்கள் முன் பேசுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார்.
கூட்டத்துக்கு பிறகு, ஆகஸ்ட் 26ம் தேதி இரண்டாவது முறையாக ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தார். ஜெயலலிதாவின் பேச்சு மற்றும் அடுத்தடுத்த திருச்சி "விஸிட்' தொண்டர் களிடையே, "திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார்' என்ற யூகத்தை ஏற்படுத்தியது. கடந்த 4ம் தேதியில் இருந்து சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சட்டசபை தேர்தலில் போட்டி யிட விரும்பும் அ.தி.மு.க., வினர் விருப்ப விண்ணப்ப மனு அளித்து வருகின்றனர். ஒரு மனுவுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தேர்த லில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், பணம் கட்டத் துவங்கியுள்ளனர்.
தாங்கள் போட்டியிடும் தொகுதிக்காக பணம் கட்டி மனு கொடுப்பவர்கள், அப்படியே தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் எனவும் பணம் கட்டி மனு கொடுக்கின்றனர். குறிப்பாக, "ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என்று அதிக மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், எம்.எல்.ஏ., பரஞ்சோதி, டாக்டர் தமிழரசி ஆகியோர் ஜெயலலிதா போட்டியிடக் கோரி, விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து திருச்சி மாவட்ட அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க., ஜெயித்த இரண்டே இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி ஸ்ரீரங்கம். "திருச்சி லோக்சபா தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு குறைவு' என கட்சி தலைமை கருதியது. அப்போது, 22 ஆயிரம் ஓட்டுகளை அதிகமாக அளித்து அ.தி.மு.க., வுக்கு ஒரு எம்.பி.,யை தந்தது ஸ்ரீரங்கம் தொகுதி. அதனால் தான், ஸ்ரீரங்கம் தொகுதி, அ.தி.மு.க., கட்சியின் கோட்டை என்கிறோம். உலகம் முழுவதும் அறியப் பட்ட ஆன்மிக சிறப்புமிக்க ஸ்தலமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்தலம் விளங்குகிறது. ஸ்ரீரங்கத்தின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா இங்கு போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment