மதுரை : மதுரையில் குற்றவாளிகளை விடுவிக்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு எஸ்.ஐ., கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., சாந்தகுமார் (54). இவர் குற்றவழக்கு ஒன்றில் சிக்கிய ஒருவரை விடுவிக்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சமயநல்லூரையடுத்த தோடனேரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைப்படி, சாந்தகுமாரிடம் ரூ. 4 ஆயிரம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு எஸ்.ஐ., சாந்தகுமாரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment