சூலூர்:"தமிழக மக்களுக்கு மறதி அதிகம். எனவே, வரும் தேர்தலில் மறக்காமல் தமிழக அரசு செயல்படுத்தி வரும், நலத் திட்டங்களை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்,' என, ஊரக தொழில்துறை அமைச்சர் பழனிசாமி பேசினார்.
கோவை அருகே உள்ள, சூலூர் ஒன்றியம் பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டடம், அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சர் பழனிசாமி பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கு 96ம் ஆண்டு முதல் தி.மு.க., அரசு தான் அதிக நிதி ஒதுக்கி வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கவும் இல்லை; வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. பள்ளிக் குழந்தைகள், பெண்களின் நலன் கருதி பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 1.50 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டத்துக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு,108 ஆம்புலன்ஸ், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் என, வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது தி.மு.க., அரசு தான்.
தொழில் வளர்ச்சி, நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் குஜராத், மகாராஷ்டிரத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால், தமிழக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் அரசை, எளிதில் மறந்து விடுகின்றனர். வரும் தேர்தலில் மறக்காமல் நலத் திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க., ஆட்சி தொடர வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் பழனிசாமி பேசினார்.

No comments:
Post a Comment