Tuesday, February 8, 2011

வீட்டுவசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை : கருணாநிதி

சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெரவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்‌கீட்டில் முறைகேடு நடந்தியிருப்பதாக கூறி முதல்வர் மீது வழக்குத் தொடர கவர்னரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று அனுமதி கோரியிருந்தார். இது குறித்து சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் : வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சதவிகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதும், மீதியுள்ள 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுவதும், எல்லா ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும் என விளக்கமளித்தார்.

No comments:

print