ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச "டிவி'யை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து பட்டை நாமம் போட்டு வருவதால், தேர்தல் நேரத்தில் இதன் விரக்தி கடுமையாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியில் கவர்ச்சியாகவும், கவரக்கூடிய வகையிலும் இருந்தது இலவச "டிவி' வழங்கும் திட்டம். அரசின் திட்டங்கள் தொடங்குவதில் தான் எப்போதும் பிரச்னை இருக்கும். அதில் இத்திட்டம் விதிவிலக்கானது. முதற்கட்டமாக தொடங்கிய போது இருந்த விறுவிறுப்பு, இறுதிகட்டத்தில் இடிந்து போயுள்ளது.
ஊரக பகுதிகளை பூர்த்தி செய்த நிலையில், பேரூராட்சி, நகராட்சிகளில் "டிவி' வினியோகம் தத்தளிக்கிறது. ஊரக பகுதிகளின் வினியோகத்தின் போது, பெரும்பாலான "டிவி'கள் விற்பனைக்கு சென்றதே, இன்று பயனாளிகளுக்கான "டிவி' குறைய காரணமானது. "இன்று வரும், நாளை வரும்,' என, குழந்தையை ஏமாற்றுவதை போல அதிகாரிகள் எதையாவது சொல்லி சமாளித்து வருகின்றனர். பொறுமைக்கு எல்லை உண்டு என்பதை போல, பொதுமக்களும் இப்பிரச்னையில் கொதித்து எழுந்துவிட்டனர். தேர்தல் அறிவிப்புகள் வந்துவிட்டால் இலவச "டிவி' வினியோகம் நிறுத்தப்படலாம். நிலைமை இப்படி இருக்கும் போது, ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கில் "டிவி' வினியோகம் பாக்கி உள்ளது. ஒரு வேளை "டிவி' வினியோகம் இல்லாமல் போனால், சட்டசபை தேர்தலில் தற்போதைய அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இலவச "டிவி' யை எதிர்பார்த்து ஏமாந்த மாவட்டவாசிகளின் குமுறல்கள் சில இதோ: வேதசூசைமாணிக்கம் (ராமநாதபுரம்): ராமநாதபுரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட "டிவி'கள் அனைத்தும் மட்டமாக உள்ளது. இந்த லட்சணத்தில் இன்னும் நிறைய பேருக்கு "டிவி' வழங்க வேண்டியுள்ளது. அதையும் இதே நிலையில் வினியோகம் செய்தால், நிச்சயம் அரசுக்கு பாதிப்பு தான். அதனால் தான் வினியோகம் செய்யாமல் தாமதம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஷேக் அப்துல்காதர்(எஸ்.பி.பட்டினம்): எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் 1643 பேரில் 999 பேருக்கு மட்டுமே "டிவி' வழங்கி உள்ளனர். மீதமுள்ள 644 பேரும் ஒரு ஆண்டாக ஏக்கத்தில் உள்ளனர். முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதே போல் திருவாடானை ஒன்றியத்திலும் நிறைய பகுதிகளில் "டிவி' வினியோகம் செய்யப்படவில்லை.
தனசேகரன்(சாயல்குடி): சாயல்குடி பேரூராட்சிக்கு "டிவி' வந்து ஐந்து மாதமாகியும் இன்னும் வழங்கவில்லை. தகுதியான பயனாளிகளை இழுத்தடிக்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், "உங்கள் பெயர் இருக்கிறது, பொறுத்திருங்கள்,' என்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் "டிவி' கிடைக்குமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சீனிவாசன்(பரமக்குடி): மாவட்டத்தில் பரமக்குடியில் தான் "டிவி' வினியோகம் மோசமாக உள்ளது. இதுவரை 24 வார்டுகளுக்கு "டிவி' வரவில்லை. கடந்த வாரம் நடப்பதாக இருந்த விழா, குளறுபடியால் தள்ளிவைக்கப்பட்டது. அ.தி.மு.க., நகராட்சியாக இருப்பதால் பாரபட்சம் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
அப்பாஸ் (முதுகுளத்தூர்): பயனாளிகள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியே இப்பகுதியில் "டிவி' வினியோகம் பாதிக்க காரணமானது. முதற்கட்டத்தை விட அதன் பின் வழங்கப்பட்ட "டிவி'கள் அனைத்தும் மோசமாக இருப்பதால் பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது.
முஷமில்(கீழக்கரை): கீழக்கரை நகராட்சியில் 3000க்கும் அதிகமான "டிவி'கள் வரவேண்டியுள்ளது. ஏற்கனவே வழங்கி பழுதான "டிவி' களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன் "டிவி' கிடைக்காத பட்சத்தில் பொதுமக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
இளங்கோ(ராமேஸ்வரம்): ராமேஸ்வரம் நகராட்சியின் எந்த வார்டிலும் முழுமையாக "டிவி' தரவில்லை. பாதி பேருக்கு காஸ், பாதி பேருக்கு "டிவி' என்ற பாலிசியில் வினியோகம் நடந்துள்ளது. பயனாளிகள் கொதித்து போயுள்ளனர்.

No comments:
Post a Comment