என்.ஆனந்தன்/திருவள்ளூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தியதையடுத்தும், சட்டசபை தேர்தலையொட்டி மக்களை கவரும் வகையிலும் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளை
உள்ளடக்கி, ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க 4,500 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த தீர்மானித்தது.திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வயலூர், கொட்டையூர், திருப்பந்தியூர், உச்சிமேடு, அகரம், திருமணிகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாய், சிறுகிளாய், பாடிச்சேரி, வடமங்கலம், திருமங்கலம், மாம்பாக்கம், இருங்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளையும், மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது.இங்கு, விமான நிலையம் அமைத்தால் மேலும் கூடுதலாக வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும். இப்பகுதியை சுற்றிலும் ஏராளமான தொழிற்சாலைகள் அமையும்.
இதனால், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பும் கூடும். கிராமங்கள் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. மாநில அரசின் பரிந்துரையின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கத் தேவையான நிலங்களை சர்வே செய்யும் பணியில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.இந்நிலையில், இத்திட்டத்துக்கு, சமூக சமத்துவப் படை நிறுவனத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி தலைமையில், போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வே பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். அங்கு சென்ற தாசில்தாரின் வாகனத்தையும் கிராம மக்கள் மறித்தனர்.
மேலும், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 15க்கும் மேற்பட்ட லாரிகளில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க திருவள்ளூர் வந்தனர்.இவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், இப்பிரச்னையை எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உட்பட பல கட்சியினர் கையில் எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கிரீன் பீல்டு விமான நிலையத்துக்கென நிலம் கையகப்படுத்தும் பணியில் இறங்கினால், இதனால், பாதிக்கப்படும் 42 கிராம மக்களின் ஓட்டுகளை பெற முடியாது என அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கென சர்வே செய்யும் பணி நின்றது.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment