சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி அறிமுக கூட்டமும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டமும், நீலாங்கரையில் நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கேட்ட இடங்களை அவர்கள் ஒதுக்கவில்லை. அப்போது கருணாநிதி அழைத்து நாங்கள் கேட்ட இடங்களை கொடுத்தார். இந்த தேர்தலில் அதிமுக
தரப்பில் முக்கிய பிரமுகர்கள் என்னை தொடர்புகொண்டு 16 சீட் தருகிறோம் என்று சொல்லி அழைப்பு விடுத்தனர். அதை நான் ஏற்கவில்லை. திமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகளை முதல்வர் கொடுத்துள்ளார். எங்கள் கூட்டணி அமோக
வெற்றி பெறும். கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். பாமக, விடுதலை சிறுத்தைகள் பாம்பும் கீரியுமாக இருப்பதாக சொல்வது தவறு. தமிழர் பாதுகாப்பு இயக்கமாக நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். கருணாநிதி
இல்லையென்றால் பாமக, விடுதலை சிறுத் தைகள் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கும். இருவரையும் கருணாநிதி அழைத்துப் பேசி, கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளார். நாங்கள் 6வது தடவையாக கருணாநிதியை அரியணையில் ஏற்றுவோம்.

No comments:
Post a Comment