Sunday, March 27, 2011

தேர்தல் படையின் வாகனச் சோதனையில் சிக்கிய டெடனேட்டர்கள், கள்ளச் சாராயம், வெள்ளி

சென்னை: தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 9 ஆயிரம் டெடனேட்டர்கள், 3 ஆயிரத்து 623 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் பல இலவசப் பொருட்கள் சிக்கியது.


வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடப்பதையடுத்து தேர்தல் ஆணையம் கெடுபிடியை அதிகரித்துள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது.

இதுவரை வாகனச் சோதனையில் கோடிக்கணக்கான பணமும், வேட்டி, சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அன்மையில் சேலம் மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 9 ஆயிரம் டெடனேட்டர்கள் சிக்கின.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,

வாக்காளர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை, வாட்ச், ஆயுதம் வழங்கியது தொடர்பாக 35 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 6.7 கிலோ வெள்ளி, 3 ஆயிரத்து 500 குடைகள், 19 சைக்கிள்கள், 400க்கும் மேற்பட்ட கொசு வலைகள், சேலைகள், சால்வைகள் மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு மக்களுக்கு கொடுக்கவிருந்தனர் என்றார்.

No comments:

print