Sunday, March 27, 2011

கருணாநிதிக்கு ஆதரவாக மகள் செல்வி, ஸ்டாலினுக்காக மனைவி துர்கா தீவிரப் பிரசாரம்

சென்னை : தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூரில் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியும், சென்னை கொளத்தூரில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவும் வீடு வீடாக சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.


Durga Stalin and Selvi
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து விட்டது. இன்னும் 3 நாட்களில் முழு வேட்பாளர் விவரமும் தெரிய வரும். இதையடுத்து பிரசாரத்தை அனைத்து தரப்பினரும் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல் களத்தில் இரு வித்தியாசமான பிரசாரகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளனர். ஒருவர் செல்வி, இன்னொருவர் துர்கா. முதல்வர் கருணாநிதியின் மகளான செல்வி, தனது தந்தை போட்டியிடும் திருவாரூரில் முகாமிட்டு வீடு வீடாக கிராமம் கிராமமாக சென்று தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்.

அதேபோல மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது கணவர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதி முதல் முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல மு.க.ஸ்டாலினும் முதல் முறையாக தொகுதி மாறி கொளத்தூரில் போட்டியிடுகிறார். எனவே இருவருக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதாக மாறியுள்ளது.
செல்வி நடந்தே சென்று வீடு வீடாக போய் மக்களை சந்தித்து கை குலுக்கி, வணங்கி ஓட்டு சேகரிக்கிறார். பல்வேறு சமுதாயத்தினரையும் நேரில் சந்தித்து திமுக அரசின் திட்டங்களைக் கூறி, சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் பிரசாரக் களத்தில் குதித்துள்ளார்

No comments:

print