சென்னை: பேரறிஞர் அண்ணாவின் ஆவி தன்னிடம் கூறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அம்பத்தூர் பொன்னேரி தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம், பொன்னேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பேசுகையில்,
நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன்.
சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.
பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்.
எழும்பூர் தொகுதியை யார் தனித் தொகுதியாக அறிவிக்கச் சொன்னது. ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கக்கூடாது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே ஜாதி பார்த்தா டாக்டரிடம் செல்கிறீர்கள்? பணம் தேவையால் அடக்கு வைக்கச் சென்றால் மதத்தைப் பார்த்தா செல்கிறீர்கள்? ஜாதியைப் பார்க்காதீர்கள், மனிதர்களைப் பாருங்கள்.
தேர்தல் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள் சந்தோஷம் அளிக்கின்றன. ஆனால் எழும்பூர் தொகுதி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆளுங்கட்சியின் கைகூலியாக இருக்கிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயமாக கடிதம் எழுதுவேன். தேர்தல் ஆணையும் இன்னும் கெடுபிடியாக இருக்க வேண்டும்.
விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று திமுகவினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா?
கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் முடியாது என்றார்.

No comments:
Post a Comment