சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. இன்று கடைசி நாள் என்பதால் சில அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்குள் வேட்பாளர்கள் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் ஊர்வலமாக அழைத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று நடந்த வேட்பு மனு தாக்கலின்போது பல இடங்களில் வேட்பாளர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொடிகளுடன் ஊர்வலமாக வந்தனர். இதனால், பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தொண்டர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிறு கட்சிகளை சேர்ந்த பல வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கலின்போது சரியான டெபாசிட் தொகையை கொண்டுவரவில்லை. இதனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுயேச்சை வேட்பாளர்கள் பலர், டெபாசிட் தொகையை சில்லரையாக கொண்டு வந்து கட்டினர்.

No comments:
Post a Comment