சிவகங்கை: வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை தேர்தல் கமிஷன் அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இதனால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைகிறது.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 13&ல் தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி, 26&ம் தேதி வரை நடக்கிறது. வேட்பாளர்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை தேர்தல் கமிஷன் மாற்றியுள்ளது.
பொதுவாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி விடும். தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்களின் பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது, மாதிரி வாக்குப்பதிவை நடத்துவது உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை காலை 7 மணிக்கு முன்னதாகவே நடத்தி முடிக்க வேண்டும். சில மையங்களில் வாக்கு இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால், ஆயத்தப்பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்குகிறது.
இந்தப் பிரச்னையை தவிர்க்க வரும் தேர்தலில் வாக்குப்பதிவை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு, டோக்கன் கொடுத்து வாக்களிக்கச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷன் செயலர் ஸ்ரீவஸ்தவா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment