சென்னை; அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு..தி.க., வேட்பாளர்கள் யார், யார் என்ற விவரம் இன்று இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று காலை கூடியது.
மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்த ஒரணியில் திரண்ட அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு பக்கம் பலமாக இருந்து வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
இதன் காரணமாக சற்று மனக்சப்பு உருவானது. மேலும் 160 தொகுதிகளில் தான் போட்டியிடுவதன் மூலம் எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஜப்பான் பூகம்பத்தை விட ஆடிப்போயின. மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்த ஒரணியில் திரண்ட அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு பக்கம் பலமாக இருந்து வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
ஜெ., பிரசாரம் ரத்தானது : இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
ஒரளவுக்கு சமரசம் ஏற்பட்டு கேட்ட தொகுதிகள் மார்க்கம்யூ., 12, இந்திய கம்யூ., 10, சமத்துவமக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 1, அகில இந்திய மூவேந்தேர் முன்னேற்ற கழகம் ஓதுக்கப்பட்டன. ஆனால் தே.மு.தி.க., வுடனான 41 தொகுதிகள் எவை, எவை என்ற பேச்சு 2 நாட்களாக நள்ளிரவு வரை நீடித்தது.
தென் மாவட்டத்தில் ஒரு இடம் இல்லை : பேச்சுவார்த்தை முடித்து வெளியேவந்த தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், " தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் " என்றார். நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். காலை முதல் துவங்கிய இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் ஒரு தொகுதிகூட தே.மு.தி.க.,வுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பது இந்த கட்சியின் தற்போதைய பெரும் கவலையாக இருக்கிறதாம் . இருப்பினும் நிர்வாகிகள் கருத்கை கேட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment