Sunday, March 20, 2011

எம்.எல்.ஏ.,க்கள் 37 பேருக்கு, தி.மு.க.,வில் "சீட்' மறுப்பு

இந்த முறை தி.மு.க.,வில் 16 அமைச்சர்கள் உட்பட, 29 பேர் தொகுதி மாறியுள்ளனர். கடந்த முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த 37 பேருக்கு இந்த முறை, "சீட்' மறுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கடந்த தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை 119 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. கடந்த முறை, இடைத்தேர்தல் வெற்றிகளையும் சேர்த்து 100 உறுப்பினர்கள் தி.மு.க., வசம் இருந்தனர்.இவர்களில், இந்த முறை 37 பேருக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தனித் தொகுதிகளாக மாறியது, வெற்றி வாய்ப்பு, கூட்டணிக்கு ஒதுக்கீடு போன்ற காரணங்களுக்காக 29 பேர் தொகுதி மாறி நிற்கின்றனர். இவர்களில் 16 பேர் அமைச்சர்கள்.

இது தவிர, கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெ.அன்பழகன் போன்ற சிலருக்கும், வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த முறை தி.மு.க., வில் வாரிசுகளுக்கும் சேர்த்து வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜேந்திரன், ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் என வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா, நெல்லை மேயர் சுப்பிரமணியனின் மகன் லட்சுமணன், மறைந்த என்.வி. என்.சோமுவின் மகள் கனிமொழி போன்றோருக்கு புதிதாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் சீட் மறுக்கப்பட்டவர்கள்:வி.எஸ். பாபு, ஆற்காடு வீராசாமி, சங்கரி நாராயணன், சுந்தர், ஜெகன்மூர்த்தி, சின்னசாமி, சூரியகுமார், திருநாவுக் கரசு, அங்கயற்கண்ணி, அய்யப்பன், நரசிம்மன், கே.பி.ராமசாமி, பிரபாவதி, எஸ்.எஸ்.மணி, குருசாமி, ஓ.சுப்பிரமணியன், தர்மலிங்கம், சவுந்திரபாண்டியன், மா.அன்பழகன், லதா அதியமான்,கலிலூர் ரகுமான், ராணி, ராஜ்குமார், எம்.பன்னீர்செல்வம், சிவசங்கர், குத்தாலம் அன்பழகன், வேதரத்னம், துரை சந்திரசேகரன், கோ.சி.மணி, உதயம் சண்முகம், மதியரசன், முருகவேல், மாலைராஜா, அப்பாவு, அ.ராஜன், தியோடர் ரெஜினால்டு.

No comments:

print