கோவை: கொலை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட 18 வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதியை தப்பவிட்ட போலீஸ்காரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா, இடும்பத்தூரை சேர்ந்த மாதனின் மகன் சின்னச்சாமி (25), ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போச்சம்பள்ளி ஆயுதப்படைப்பிரிவில் போலீசாக சேர்ந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, கோவை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்தார். சின்னச்சாமியின் தந்தை நாதஸ்வர தயாரிப்பாளர். அரசு வேலையில் சேர வேண்டும் என்ற நோக்கில் போலீஸ் வேலையில் சேர்ந்தார். பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக, பட்டப்படிப்பையும் தொடர்ந்தார். பாப்பநாயக்கன்பாளையம், செங்காடு பகுதியில் தங்கி படித்துவந்தார். திருமணத்துக்கான ஏற்பாடுகளை பெற்றோர் கவனித்து வந்தனர். இச்சூழலில் கடந்த 16ம் தேதி கொலை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட 18 வழக்குகளில் சம்பந்தப்பட்ட, கைதி சங்கர் (எ) ஜெயசங்கரை (33), கோவை சிறையிலிருந்து, கோர்ட் உத்தரவுப்படி ஆயுதப்படை போலீசார் சின்னச்சாமியும், ராஜவேலுவும் அழைத்துச் சென்றனர்.
நாமக்கல், திருச்சி, தருமபுரி கோர்ட்டுகளுக்கு பஸ்சில் அழைத்துச் சென்றனர். கைதியை ஆஜர்படுத்திவிட்டு, தருமபுரியில் இருந்து சேலத்துக்கு, பஸ்சில் கைதியோடு சென்றனர். சேலத்தில் இருந்து கோவை வர பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லச் சொல்லி, கைதி ரகளையில் ஈடுபட்டார். அதனால் டீலக்ஸ் பஸ்சை தேடிச் செல்ல, உடன் வந்த போலீஸ் ராஜவேலு சென்றார். சின்னச்சாமி கைதிக்கு பாதுகாப்பாக இருந்தார். பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் பெரிய மூட்டையை கொண்டுவந்து அருகே வைத்தார். அப்போது, எதற்காக மூட்டையை வைக்கிறார் என்று, சின்னச்சாமி யோசித்து திரும்புவதற்குள், கைதி ஜெய்சங்கர் தப்பியோடினார். இரவு 9.00 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் முழுக்க, சேலம் நகர போலீசாரின் உதவியோடு, இருவரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், கைதியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோவையில் உள்ள ஆயுதப்படைப்பிரிவு துணை கமிஷனரிடம் தகவலை தெரிவித்தனர்.
கோவை வந்தவுடன் பேசிக்கொள்ளலாம், என்று அதிகாரிகள் கூறினர். அதன்படி, இரு போலீசாரும் சேலத்தில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை 4.20 மணிக்கு, பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பஸ் ஸ்டாப்பில் இறங்கினர். ராஜவேலு, முதலில் இறங்கினார். இரண்டாவதாக இறங்கிய சின்னச்சாமி, பாதுகாப்புக்கு எடுத்துச்சென்ற 7.628 ரக துப்பாக்கியால், கீழ் தாடையில் தனக்குத்தானே சுட்டுக்கொண்டார். தாடை வழியே நுழைந்த குண்டு, தலையின் மேற்பகுதி வழியே வெளியேறியது. பஸ் ஸ்டாப் பகுதியில் ரத்தம் பரவியது. தகவலறிந்த ஆர்.டி.ஓ., முகமதுமீரான், விசாரணை மேற்கொண்டார். போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, துணை கமிஷனர் உமா, காமினி ஆகியோர் அரசு மருத்துவமனையில் இருந்த சின்னச்சாமியின் உடலை பார்வையிட்டனர்.
போலீஸ் தற்கொலைக்கு யார் காரணம்? காவலில் அழைத்துச் சென்ற கைதி தப்பியோடியதால், உயர் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக, சின்னச்சாமியின் உடலை பார்க்க வந்த சக ஆயுதப்படை போலீசார் கூறினர்.
அவர்கள் கூறியதாவது: ஆயுதப்படை பிரிவிலுள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மிகவும் கண்டிப்பானவர். எந்த சாக்குபோக்கையும் ஏற்றுக் கொள்ளமாட்டார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், கடுமையான தண்டனை வழங்குவதே அவரது பாணி. எந்த சூழலிலும் இதை மாற்றிக் கொள்ள மாட்டார். சில மாதங்களுக்கு முன் சபரிமலை செல்ல விடுப்பு தர மறுத்து, சர்ச்சையை கிளப்பினார். இப்பிரச்னை பெரியதாகி, போலீஸ் கமிஷனர் வரை சென்றது. அவரை நேரடியாக சந்தித்து பேசிய பின்பே, விடுப்பு அளித்தார். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம், கடும் தண்டனையளிக்கும் உயர் அதிகாரியை நினைத்தே, சின்னச்சாமி தற்கொலை செய்திருப்பான். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தப்பியோடிய கைதி மீது 6 கொலை வழக்குகள்: கோவை சிறையிலிருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தச் சென்ற போது கைதி தப்பியோடினார். அவர் மீது ஆறு கொலை வழக்குகளும், எட்டு வழிப்பறி வழக்குகளும், 10 கற்பழிப்பு வழக்குகளும் நான்கு மாவட்டங்களில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா, கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (எ) ஜெய்சங்கர்(33). இவர் மீது, 24 வழக்குகள் உள்ளன. தர்மபுரியில் சண்முகம் என்பவரை கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை செய்தார். தர்மபுரி அருகே தொப்பராகம்பட்டியில் சிறுமியை கற்பழிக்க முயன்ற போது, தடுக்க வந்த பாட்டியை கொலை செய்தார். குண்டல்பட்டி அருகே, அண்ணாதுரை என்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி, அவரது மனைவியிடமிருந்த நகையை பறித்துக் கொண்டு வீட்டிலிருந்த மொபட்டை திருடிச் சென்றார்.
சேலம், மாட்லாம்பட்டியருகே பெண்ணை கத்தியால் குத்தி, நகையை பறித்துச் சென்றார். ஓசூர் அருகே பேராண்டம்பள்ளியில், ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணை அரிவாளால் வெட்டி, குழந்தையை கொலை செய்ய முயன்ற போது, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜெயமணி என்ற பெண் போலீஸ் ஏட்டை, 2009ல் திருப்பூர் மாவட்டம் வலசுபாளையம் பகுதியில் கற்பழித்து கொலை செய்தார். எடப்பாடியருகே, போலீஸ்காரரின் மனைவி இந்திராவை கற்பழித்து கொலை செய்தார். இது போன்று ஜெய்சங்கர் மீது ஆறு கொலை வழக்குகளும், எட்டு வழிப்பறி வழக்குகளும், 10 கற்பழிப்பு வழக்குகளும் உள்ளன. கோவை, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இந்த வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளில் கைது செய்து சிறையிலிருந்த ஜெய்சங்கரை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தச் சென்ற போது, நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு, சேலம் பஸ் ஸ்டாண்டில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடினார். அவரை, போலீசார் தேடிவருகின்றனர்.

No comments:
Post a Comment