சென்னை : இந்திய ஜனநாயக கட்சி, 45 இடங்களில், தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடுகிறது. அதே போல், ஜெயலலிதாவை எதிர்த்து, தமிழரசி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். "ஜெயலலிதாவிற்கு இருக்கும் அனைத்து தகுதிகளும், எங்களது வேட்பாளருக்கும் உண்டு' என, கட்சியின் நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி, நிறுவன தலைவர் பச்சமுத்து கூறியதாவது:ஊராட்சித் தலைவர் முதல், முதல்வர் வரையுள்ள பதவிகளில், ஒருவர், இரண்டு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இளைஞர்களுக்கு வழி விட்டு, முதியவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்.படித்தவர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சாதனை படைத்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். 16 வயதுடைய இளைஞர்களுக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பு அளித்தால், அரசியலிலும் ஆட்சியிலும் இளமைத் துடிப்பும், லட்சியப் பிடிப்புடைய புது ரத்தம் பாயும்.தமிழகத்தின் வருவாய் என்பது மக்களின் வரிப்பணமே. அவற்றை எவை, எவற்றிற்கு செலவிட வேண்டுமென திட்டமிட்டு, முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும். அந்நிதியை கட்சி தலையீடின்றி மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டும்.வரிப்பணத்தை இப்படி முறையாக செலவு செய்திருந்தால், கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் எல்லா தரப்பு மக்களுக்கும் எல்லா வசதிகளும் கிடைத்திருக்கும். ஆனால், ஓட்டுகளை பெறுவதை குறிக்கோளாக கொண்டு, மக்களின் வரிப்பணம், இலவசத் திட்டங்களுக்கு செலவிடப்படுவதால், முக்கிய திட்டங்களுக்கு செலவிட முடியாமல் போய் விடுகிறது.
உதாரணத்திற்கு, தனியார் பங்களிப்போடு தேசிய நெடுஞ்சாலைகள் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதை போன்று, நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், மின் வெட்டு என்பதே தமிழகத்தில் இருந்திருக்காது.இதை செய்திருந்தால் உற்பத்தி பெருகி, ஏற்றுமதி அதிகரித்திருக்கும். வேலை வாய்ப்பும் அதிகரித்திருக்கும். விவசாயிகளுக்கு தடையில்லா மின் வினியோகம் கொடுத்திருக்கலாம்.நாம் பிறப்பால் தமிழர்கள், இந்தியர்களாகிய நாம் அனைவரும், சமூக நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டுமென்பதே, எங்கள் கட்சியின் கொள்கை. இல்லாத திராவிடத்தை தமது கட்சிகளின் பெயர்களில் சேர்த்துக் கொண்டு, மக்களை பிளவுபடுத்தி ஏமாற்றும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.நாட்டின் வளர்ச்சி, கிராமங்களில் துவங்க வேண்டும். அரசு வருவாயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், 65 சதவீதம் கிராம வளர்ச்சிக்கு ஒதுக்க வேண்டும்.
இதனால், கிராமங்களில் இருந்து நகருக்கு குடிபெயரும் மக்கள் தொகை குறையும். இதனால், நகருக்கு அருகில் விளை நிலங்கள் எடுக்கப்பட்டு நகரை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை அரசுக்கு ஏற்படாது.கடந்த 45 ஆண்டுகளில் தமிழக முதல்வராக, திரைப்படத் துறையினரே இருந்து வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பான்மையினராக இருக்கும், விவசாயிகள் தரப்பில் இருந்து ஒருவர் முதல்வராக வர வேண்டுமென்பது எங்கள் கட்சியின் லட்சியம்.மக்கள் தொகையில் ஆண்களுக்கு சமமாய் பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய இடம் சமூகத்தில், அவர்கள் பணியாற்றும் இடங்களில், பொது வாழ்க்கையில் இன்னும் அளிக்கப்படவில்லை. அரசியல், ஆட்சி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்பது இந்திய ஜனநாயக கட்சியின் லட்சியங்களும் ஒன்று. ஆனால், தற்போது நாங்கள் முதல்முயற்சியாக 11 பெண்களை நிறுத்தியிருக்கிறோம்.எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமூக சமத்துவப் படையின் தலைவரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி, அவரது பதவியை உதறி விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு, சிவகாமி தூண்டுகோலாக இருப்பார் என நம்புகிறேன்.இவ்வாறு பச்சமுத்து கூறினார்.
இலவசத்தை ஒழிக்கணும் : *இலவசங்களை கொடுத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். இலவசங்கள் பெயரால், மனித உழைப்பும், மக்கள் வரிப்பணமும் வீணாக்கப்படாமல் பார்த்துக் கொள்வதோடு, அவை, தனி மனித முன்னேற்றத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் நல்ல முறையில் பயன்படுமாறு, இந்திய ஜனநாயக கட்சி பார்த்துக் கொள்ளும்.
* இத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, 123 இடங்களில் போட்டியிடுகிறது. அதில், 45 இடங்களில் தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து, வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து தமிழரசி நிறுத்தப்பட்டுள்ளார்.
*தரமான கல்வியும், தடையில்லா மின்சாரமும், அரசியல் தலையீடு இல்லா தொழிற்சாலைகளும் அதிகம் இருந்தால், இயற்கையாகவே தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

No comments:
Post a Comment