சென்னை: சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 63 தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் 60 தொகுதி வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அவர்களில் 12 பேர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியாளர்கள் சிலர் தங்கபாலுவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜி.கே.வாசன் பாசறை சென்னை மண்டல அமைப்பாளர் பாலு தலைமையில் காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று திரண்டு வந்தனர். வளாகத்தில் திடீரென தங்கபாலுவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது பற்றி பாலு கூறுகையில், ÔÔகாங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முகவரி இல்லாத ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எந்த கோஷ்டியாக இருந்தாலும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இப்படி செய்தோம்ÕÕ என்றார். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் மாணவர் அணி முன்னாள் செயலாளர் செல்வி கூறுகையில், ÔÔகிருஷ்ணகிரியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அசினா சையத்துக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட உள்ளேன்ÕÕ என்றார்.

No comments:
Post a Comment