சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் முதல் நாளில் இன்று தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன், பொங்கலூர் பழனிச்சாமி மனுத்தாக்கல் செய்தனர். வரும் 13 ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் துவங்கியது. பெரும் அளவில் இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தி.மு.க., சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் க.அன்பழகன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி, சைதாப்பேட்டையில் போட்டியிடும் மகேஷ் குமார், தங்களுடைய மனுவை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினர். மனுவை தாக்கல் செய்த அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில் கூட்டணி கட்சியினர், சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், ஆகியோர் எங்களை வரவேற்கும் சூழல் உள்ளதை நான் அறிய முடிகிறது. எனவே எங்களுடைய வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் தொகுதியில் தனேசன் என்பவர் அங்கீகரிக்கப்படாத அகில பாரத இந்து மகாசபை சார்பில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கல் இன்று துவங்கினாலும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்ட தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 26 ம்தேதி, . பரிசீலனை 28 ம் தேதி, வாபஸ் பெற 30 ம் தேதி கடைசிநாள் ஆகும்.

No comments:
Post a Comment