Monday, March 14, 2011

"ஆம்னி பஸ்'களையும்கண்காணிக்க உத்தரவு

மதுரை:பணப்பட்டுவாடாவை தடுக்க "ஆம்னி' பஸ்களையும் கண்காணிக்க, தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலில் நன்னடத்தை விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கடுமையாக அமலாக்கி வருகிறது. குறிப்பாக, பணப்பட்டு வாடாவை தடுக்க வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். @மலும், போஸ்ட் மேன்கள், கூரியர் சர்வீஸ் நிறுவன ஊழியர்களை சோதனையிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால், பல இடங்களில் நடந்த வாகன சோதனையில் கட்டுக் கட்டாக பணம் பிடிபட்டது. இதையடுத்து, வேறு ஏதேனும் வகைகளில் பணநடமாட்டம் இருக்கலாம், என கருதிய தேர்தல் கமிஷன் தற்போது, ஆம்னி பஸ்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.வெளியூர் செல்லும், மதுரை வரும் ஆம்னி பஸ்களில் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனையிட பறக்கும் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் பொருட்களுக்கும், ஒரு லட்சத்திற்கு மேல் பணம் இருந்தால் அதற்கும், உரிய ஆவணங்கள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பஸ்களில் அனுப்பும் பொருட்களுக்கான அசல் ஆவணங்களும் இருக்க வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களும் பறக்கும் படையினருக்கு ஒத்துழைக்க வேண்டும், என தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

print