Monday, March 14, 2011

பாபர் மசூதி இடிப்பால் பா.ஜ.விற்கு நீங்காத கறை

புதுடில்லி : பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பா.ஜ.,வின் நற்பெயருக்கு நீங்காத கறையை ஏற்படுத்திவிட்டது என்று, அக்கட்சி மூத்தத் தலைவர் அத்வானி கூறியுள்ளார். இதுகுறித்து, தனது இணைய வலைதளத்தில் அத்வானி கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பாபர் மசூதி இடிக்கப்பட்டது துரதிஷ்டவசமான சம்பவம். இது பா.ஜ.,வின் நற்பெயருக்கு நீங்காத கறையை ஏற்படுத்திவிட்டது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். அப்போது நான் எழுதிய கட்டுரை ஒன்றில், அந்த இயக்கத்தில் பங்கேற்றவர்கள், பொறுமை காக்காத தன்மையை வழிநடத்தியவர்கள் உணரவில்லை என்று குறிப்பிட்டு, ஆகவே அப்போது நடந்த சம்பவத்திற்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், ஏன் வருத்தம் தெரிவிக்கிறீர்கள் என்று, எனது கட்சியைச் சேர்ந்தவர்களே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அயோத்தி நடவடிக்கையில் நான் இணைந்து செயல்பட்டதற்காக பெருமைப்படும் அதே நேரத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக வருத்தமடைகிறேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத துக்க நாளாக அமைந்துவிட்டது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

No comments:

print