தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு ஜெயலலிதா அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினீர்கள். இப்போது நீங்களே இலவச திட்டங்களை அறிவித்துள்ளீர்களே? எங்களது தேர்தல் அறிக்கை வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அனைத்து துறைகளும் வளர்ச்சி காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே கூறியுள்ளோம். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா? தேர்தல் கமிஷன் கண்காணிப்பையும் மீறி பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ள வேண்டும். ஆண்டிப்பட்டியை விட்டு, ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவது ஏன்? ஆண்டிப்பட்டி தூரத்தில் உள்ளது. திருச்சியில் ஏர்போர்ட் உள்ளதால் இங்கிருந்து வேறு எங்கும் எளிதாக பிரசாரத்துக்கு செல்ல முடியும் என்பதால்தான் இங்கு போட்டியிடுகிறேன். அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? நாங்கள் எதையும் பின்னோக்கி பார்ப்பதில்லை. முன்னோக்கி செல்வதையே விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, March 24, 2011
மதிமுக விலகியதால் பாதிப்பா? : ஜெயலலிதா

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment